» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனையில் மகனை கத்தியால் குத்தியவர் கைது

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:09:29 AM (IST)

சாத்தான்குளத்தில் குடும்ப பிரச்சனையில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தச்சமொழி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). மாட்டு இறைச்சி வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சமுத்திரக்கனி. இவர்களுடைய மகன் முருகன் (28). ஆறுமுகத்திற்கும், சமுத்திரக்கனியின் தங்கையான அதே பகுதியை சேர்ந்த சங்கரம்மாள் என்பவர் குடும்பத்துக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் சமுத்திரக்கனி, முருகன் ஆகியோர் சங்கரம்மாளிடம் பேசிக் கொண்டு இருந்தனர். 

அப்போது அங்கு வந்த ஆறுமுகம் மனைவி மற்றும் மகனை கண்டித்தார். இதில் அவர்களுக்கும் ஆறுமுகத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தான் வைத்து இருந்த கத்தியால் முருகனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes




Thoothukudi Business Directory