» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சடையநேரி கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டக்கூடாது : த.வெள்ளையன் வலியுறுத்தல்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 7:55:54 AM (IST)

சடையநேரி கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று த.வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் நங்கைமொழி அருகே உள்ள சடையநேரி குளத்திற்கு தண்ணீர் வரும் சடையநேரி கால்வாயில் பிரிவினை தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டால் அதிக அளவிலான தண்ணீர் புத்தன்தருவைகுளத்திற்கு செல்லும். ஆனால் சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் வராது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பிரிவினை தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சடையநேரி கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டுவது தேவையற்ற வேலை. இதனால் சடையநேரி குளத்தை நம்பி இருக்கும் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். புத்தன்தருவை பகுதியில் அவ்வளவு விவசாய நிலங்கள் இல்லை. எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சடையநேரி கால்வாய் பம்புசெட் விவசாய சங்க தலைவர் ஆதிலிங்கம், உடன்குடி வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, உடன்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலசிங், ஆம் ஆத்மி குணசீலன் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory