» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு : ஆலய பிரதிஷ்டை விழாவுக்கு சென்றபோது சோகம்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:19:11 PM (IST)

புளியம்பட்டி அருகே மாதா கோவிலுக்குச் சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், புளியம்பட்டி அருகே உள்ள கே.கைலாசபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வதற்காக கல்லத்திகிணறு பகுதி மக்கள் சிலர் ஒரு வேனில் கைலாசபுரத்துக்கு சென்றனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் ஓட்டினார். அவர்கள் சென்ற வேன் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு பகுதியை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.இதில் வேனில் இருந்த கல்லத்திகிணறு பகுதியைச் சேர்ந்த கரோலின் சூசை மனைவி மேரி (48), தோமஸ் மனைவி சந்திரா (35) ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 

மேலும் வேனில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்தாய் (65), டோர்த்தி (65), ஸ்டெல்லா (43), ஜெஸ்டினா (42), சகாய பிரபு (40), பாத்திமா (60), சவுரியம்மாள் (60), வள்ளியம்மாள் (60), அன்னத்தாய், ஜேக்கப் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன், புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 12 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலியான 2 பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேன் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory