» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 12:53:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் பாலியல் புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் வட்டார வளர்ச்சி அலுவலக வட்டார மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகமானது தென்திருப்பேரை மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்) வாக கோவில்பட்டியை சேர்ந்த அரவிந்தன் (52) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 14ம் தேதி அலுவலகத்தில் அவர் பணியில் இருந்த போது அதே அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய பெண் அலுவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூற‌ப்படுகிறது. 

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் புகார் அளித்தார். ஆழ்வார்திருநகரி போலீசார், 354 ஐ.பி.சி. பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

வட்டார வளர்ச்சி அலுவலர் பாலியல் புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இச்சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

GomathiAug 27, 2019 - 09:53:30 AM | Posted IP 162.1*****

இது போன்ற ஆட்களை செருப்பால் அடிக்கணும் நடு ரோட்டில் வைத்து 52 வயசு ஆகுது... இன்னும் புத்தி இல்லை யா வீட்டில் பொண்டாட்டி பிள்ளைங்க சரியில்லை போல அதான் அடுத்தவன் பொண்டாட்டி ன்னு பாக்காமல் கையை பிடிச்சி இழுக்குது நாய்... தங்கச்சி பொண்ணு மாதிரி இருக்கிறவுங்க பொண்டாட்டி யா தெரியுதா... கலெக்டர் சார் சூப்பர் .....

கணபதி தூ டிAug 18, 2019 - 09:46:31 PM | Posted IP 108.1*****

கலெக்டரின் துரித நடவடிக்கைையை பாராட்டும் அதே வேளையில் ஊழியர்களின் செயல்பாடுகளையும் நன்கு விசாரித்து இது போல் நடவாது பார்த்தது ெக Tள்ளவேண்டும் கணபதி

GanesanAug 18, 2019 - 05:18:05 PM | Posted IP 108.1*****

Best treatment super action very nice collector G

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory