» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:31:34 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி., முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், குடிநீர் வாரிய அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:-கழுகுமலை, எட்டயபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார்கள் வரப்பெற்றுள்ளது. குடிநீர் வடிகால்வாரிய அலுவலர்கள், பேரூராட்சி பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடிநீர் அளவினை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள சிறுகுளங்கள், கிணறுகள் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்களை தூர்வாரி சீரமைத்து பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெறப்படும் குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் பகிர்மான குழாய்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் மற்றும் குடிநீர் கிணறுகளையும் பராமரிப்பு செய்து அவைகளையும் பயன்படுத்த வேண்டும். திருச்செந்தூர் பேரூராட்சியில் அடிக்கடி பல்வேறு விழாக்கள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். எனவே இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தூர்பாண்டியன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஷெரிப், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் கென்னடி, உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ்குமார், மெர்சி, கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Thoothukudi Business Directory