» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:02:46 AM (IST)திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக  நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10ஆம் திருநாளான நேற்று சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி, நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மணியம் தமிழரசு, பிச்சையா, சிவா, குமார், முத்துபிரபு, தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி, சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதியுலா வந்து கோயில் சேர்ந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில்... 

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா ஆக. 20ஆம் தேதி அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை (ஆக.19) மாலை 4.30 மணிக்கு கொடிப்பட்ட வீதியுலா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் சி.குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Thoothukudi Business Directory