» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 8:57:08 AM (IST)

காயல்பட்டினத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிலிம் லீக் இளைஞரணி, முஸ்லிலிம் மாணவர் பேரவை ஆகியன சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வழிகாட்டுதல் முகாம் நேற்று நடைபெற்றது.முகாமுக்கு, பேரவை தேசிய ஒருங்கிணைப்பாளரும், கடையநல்லூர் எம்.எல்.ஏ.வுமான முஹம்மது அபூபக்கர் தலைமை வகித்தார். மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை திறன் மேம்பாட்டுக் கழக முன்னாள் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது நயீமுர் ரஹ்மான் அறிமுகவுரையாற்றினார்.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முகாமைத் தொடங்கிவைத்துப் பேசியது: இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேலை கிடைக்க வேண்டும் என இருந்துவிடக் கூடாது. பெண்கள் வீடு மட்டும்தான் பாதுகாப்பு என கருதி இங்கேயே ஏதாவது வேலை கிடைக்கிறதா என பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. தன்னம்பிக்கையோடு காலை வெளியே எடுத்து வைத்து வெற்றி நடை போடுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் அவர்.முகாமில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இம்மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2ஆயிரம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகரச் செயலர் முத்து முகம்மது, மாவட்ட துணைச் செயலர் காதர், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வஹிதா,  ஆறுமுகனேரி நகரச் செயலர் கல்யாணசுந்தரம், முஸ்லிலிம் லீக் மன்னர் பாதுல்அஸ்ஹப், நகராட்சி ஆணையர் புஷ்பலதா, திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் பாரத்,  ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் பத்ரகாளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

வேலை இல்லாதவன்Aug 18, 2019 - 02:36:08 PM | Posted IP 162.1*****

அரசு வேலை கிடைத்தால் நல்லா இருக்கும் .. எல்லாம் அரசியலுக்காக நாடகம் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory