» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் 3.5 லட்சம் நகை கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

வியாழன் 15, ஆகஸ்ட் 2019 12:49:42 PM (IST)

தூத்துக்குடியில் பிரபல ஊறுகாய் கம்பெனி அதிபர் வீட்டில் ரூ.3.5 லட்சம் மதிபுள்ள நகைகளை கொள்ளடியத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் விஜயசேகர் (52). ஊறுகாய் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் மதுரைக்குச் சென்றுள்ளார். இன்று காலை அவர்கள் ஊர் திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 25 நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. 

இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் ஆகும். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory