» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தத்தெடுப்பு விழிப்புணர்வு முகாம்

புதன் 14, ஆகஸ்ட் 2019 8:31:53 PM (IST)



தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லுாரியில் தத்தெடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லுாரியில் தேசிய அளவிலான இன்னர்வீல் சங்கத்தின் மிஷன் மம்தா திட்டத்தின் நோக்கமாக தத்தெடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்னர்வீல் கிளப் மகளிர் அமைப்பின் சார்பாக நடைபெற்றது. இதில் இன்றைய இளம் பெண்களிடையே குழந்தை மற்றும் முதியோர் அனாதைகள் இல்லா இந்தியாவை உருவாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வழக்கறிஞர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் சுவர்ணலதா முதியோர் மற்றும்  குழந்தைகளை தத்தெடுக்கும் விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார் . 

இதில் கல்லுரி முதல்வர் மீனாகுமாரி கல்லூரியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  யோகேஸ்வரி நித்யா, வனிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி  மாணவிகள் பங்கேற்றனர் . இன்னர்வீல் கிளப் மகளிர் அமைப்பின் முதல்வர் ரேமோல் ஆனந்த் , நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர் வனிதா ஆறுமுகம்  மற்றும் உறுப்பினர்கள் இணைந்து   நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory