» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : தீவிர சோதனைக்குப் பின் பக்தர்கள் அனுமதி

புதன் 14, ஆகஸ்ட் 2019 5:54:08 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகினறனர்.

நாட்டின் 73வது சுதந்திர தின விழா நாளை (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள், ரயில்வே ஸ்டேஷன் மற்றும வழிபாட்டு ஸ்தலங்களில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான முக்கிய கோயில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கத்தை விட கூடுதலாக 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 

திருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மேற்பார்வையில் கோயில் சப் இன்ஸ்பெக்டர் சங்கர், தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகு பக்தரகள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல் கோயில் கடற்கரை பிரகாரங்களில் இரவு பகலாக போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிபவர்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education



Thoothukudi Business Directory