» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுதந்திர தின விழா : காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை

புதன் 14, ஆகஸ்ட் 2019 1:31:31 PM (IST)தூத்துக்குடி மாவட்ட சுதந்திர தின விழாவிற்கான காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையை மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன், பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். 

நாளை (15.08.2019) 73வது சுதந்திர தின விழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் காவல்துறையினர், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, (இராணுவம்) மற்றும் தேசிய மாணவர் படை (கப்பற்படை), சாரணர்படை ஆகியோர்  அணிவகுப்பு நடைபெறும். இந்த அணி வகுப்பு மரியாதைக்கான ஒத்திகை இன்று (14.08.2019) காலை தூத்துக்குடி தருவை மைதானத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த அணிவகுப்பு மரியாதை ஒத்திகையை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன், பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். தூத்துக்குடி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஷ்பத்மநாபன் தலைமையில், ஆயுதம் ஏந்திய ஆண் மற்றும் பெண் காவலர்கள் அடங்கிய படைப்பிரிவுகளுக்கு சப்இன்ஸ்பெக்டர்கள்  மயிலேறும் பெருமாள், சக்திவேல், நங்கையர் மூர்த்தி, பெண் சப்இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் பொறுப்பேற்று அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory