» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.

புதன் 14, ஆகஸ்ட் 2019 12:13:24 PM (IST)



தூத்துக்குடியில் 73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையேற்று, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் பள்ளியின் தாளாளருமான சி.த செல்ல பாண்டியன், முன்னிலை வகித்தார் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, பள்ளியின் தலைமையாசியர் ஜேக்கப் மனோகர் ஆகியோர் வரவேற்று பேசினர் 

இப்பேரணி மட்டக்கடை ஒன்றாம் கேட் வழியாக மாநகராட்சி வந்து மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தேசதந்தை மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜர் போன்ற தேசதலைவர்களின் வேடமணிந்து மாணவர்கள் பலர் பேரணியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் கிளாட்சன் விஜயகுமார், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், நாட்டு நலப்பணி இயக்க பொறுப்பாசிரியர் பேட்ரிக் சாமுவேல், உடற்கல்வி ஆசிரியர் அதனாசியஸ், மதுரம், பட்டதாரி ஆசிரியர் செல்வின் ஜெயக்குமார் பால்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam





Black Forest Cakes



Thoothukudi Business Directory