» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மகனுடன் இளம்பெண் திடீர் மாயம்

புதன் 14, ஆகஸ்ட் 2019 11:58:02 AM (IST)

தூத்துக்குடியில் 8 வயது மகனுடன் இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி கால்டுவெல் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது மனைவி முத்துலெட்சுமி (25). இந்த தம்பதியருக்கு அபிஷேக் என்கிற 8 வயது மகன் உள்ளான். கடந்த 11ம் தேதி மதியம் முத்துலெட்சுமி தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியாததால் சாமிகண்ணு தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகினறார்.

தட்டச்சு பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகள் ரேவதி (19), விளாத்திகுளம் பகுதியில் உள்ள பயிற்சி நிலையத்தில் தட்டச்சு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி தடடச்சு வகுப்பிற்கு சென்றவர், அதன் பின்னர் வீடுதிரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஆவுடையப்பன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory