» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிலதிபர் காரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் அபேஸ் : போலீஸ் விசாரணை

புதன் 14, ஆகஸ்ட் 2019 11:49:18 AM (IST)

தூத்துக்குடியில் தொழிலதிபர் காரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருடுபோனது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி பொன்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி மகன் பாலசங்கரவர்மன் (40). மீன் ஏற்றுமதியாளரான இவர், தூத்துக்குடியில் மீன் வாங்குவதற்காக காரில் வந்துள்ளார். வெம்பூர் அருகே வந்தபோது, கார் பழுதானது. சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அவரிடம் இருசக்கரவாகனத்தில் வந்த 35வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். 

அவர் சென்றபின்னர் பார்த்தபோது பாலசங்கரவர்மன் காரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

அருண்Aug 16, 2019 - 09:07:46 AM | Posted IP 108.1*****

மனிதர்கள் அனைவரும் திருடர்கள் தான் ஒரு வகையில்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


CSC Computer EducationThoothukudi Business Directory