» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து 4 குழந்தைகள் காயம் - வகுப்பறையை ஆட்சியர் ஆய்வு

புதன் 14, ஆகஸ்ட் 2019 8:05:02 AM (IST)



திருச்செந்தூரில் பள்ளி மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்தனர். சம்பவம் நடந்த வகுப்பறையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகரில் ஆர்.சி. தொடக்கப்பள்ளி கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 180 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலையில் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.காலை 10.45 மணியளவில் மாடியில் உள்ள 3-ம் வகுப்பின் மேற்கூரை சிமெண்டு பூச்சு சுமார் 5 அடி நீள, அகலத்தில் திடீரென்று பெயர்ந்து விழுந்தது. அப்போது வகுப்பில் இருந்த மாணவர்கள் அக்சன் (8), ஜெயம் (8), ஆன்ட்ரூ (8), மாணவி மெர்சி ராணி (8) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

உடனே ஆசிரியர்கள், காயம் அடைந்த மாணவர்களை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், பள்ளிக்கூடத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த வகுப்பறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "திருச்செந்தூர் அமலிநகரில் தனியார் நிர்வாகம் சார்பில் செயல்படும் பள்ளியில் கடந்த ஆண்டுதான் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. அதற்குள்ளாக பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து, 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். எனவே, அந்த பள்ளிக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு உள்ளது. அந்த பள்ளியின் கட்டுமான தரத்தை பொதுப்பணித்துறை மற்றும் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின்போது, விதிமீறல் இருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அப்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, டிஎஸ்பி பாரத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

இவன்Aug 14, 2019 - 12:03:44 PM | Posted IP 162.1*****

திருட்டு திராவிட ஆட்சியில் (திருட்டு திமுகவும் , திருட்டு அதிமுகவும்) ஊழல் அப்படிதான் இருக்கும் ...

நிஹாAug 14, 2019 - 10:55:47 AM | Posted IP 162.1*****

விதிமீறல் கண்டிப்பாக இருக்கும். ஒப்பந்ததாரரை மட்டும் தண்டித்துவிட்டு கமிஷன் வாங்கிய அனைவரும் ஒதுங்கி விடுவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory