» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன் தூளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு : விசைப்படகு உரிமையாளர், தொழிலாளர்கள் கோரிக்கை

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 8:44:44 PM (IST)மீன் தூளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவித ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தூத்துக்குடி மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர்கள் மீன் ஏலம் விடுவோர் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர்கள் மீன் ஏலம் விடுவோர் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை பீச் ரோட்டில் உள்ள பெல் ஹோட்டலில் வைத்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறும் போது, தூத்துக்குடி மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர்கள் மீன் ஏலம் விடுவோர் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக அகில இந்திய மீன் தூள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு எங்களுடைய முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம். மீன் அரவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மீன்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்து கடந்த 31.12.2018 ல் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஐந்து சதவீத வரியை முன்தேதியிட்டு 1.7.2017 முதல் கட்ட வேண்டும் என்று கூறி மீன் தூள் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள். 

இதனால் இந்த தொழிலில் உள்ள நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத காரணத்தினால் தொழிற்சாலையை தற்காலிகமாக காலவரையின்றி மூடியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களை மீன் தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் எங்களிடம் நல்ல விலைக்கு மீன்களை வாங்கி கொண்டு இருக்கிறார்கள். தற்போது மீன் அரவை ஆலைகள் மூடியுள்ள காரணத்தினால் எங்கள் மீன்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளோம் .மேலும் டீசல் பேட்டாவுக்கு ஓடாத சூழ்நிலையில் உள்ளோம். 

இந்த தொழிலை நம்பி மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். ஆகவே மேற்படி ஜிஎஸ்டி விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீன்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை உடனடியாக காப்பாற்ற தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம் என கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest CakesCSC Computer Education

Anbu Communications
Thoothukudi Business Directory