» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோவிலில் தகராறு செய்த 5பேர் கைது

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 5:24:20 PM (IST)

தூத்துக்குடியில் கோவிலில தகராறு செய்தாாக 5பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாகது : தூத்துக்குடி ஆரோக்கியபுரம், தவஸ்ரீ நகரை சேர்ந்தவர் மைதீன் மகன் அப்துல் காதர் (46) இவர் இதற்கு முன்னாள் கிருஷ்ணராஜ புரத்தில் வசித்து வந்துள்ளார். கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலின் வரி பணத்தை அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் சித்திரவேல் என்கிற குமார்(61)  என்பவர் வசூல் செய்துள்ளார். இந்நிலையில் சித்திரவேல் குமார் அப்துல் காதரிடம் கிருஷ்ண ராஜபுரத்தில் இருக்கும்போது வரி பணம் வாங்கியுள்ளார். 

தற்போது ஆரோக்கியபுரத்திற்கு வந்த பிறகு  வரிப் பணம் வாங்காத காரணத்தால் அப்துல் காதரும் அவரது நண்பர்களுமான அதே பகுதியைச் சேர்ந்த கசாலி மகன் அப்துல் ரகுமான் (19), ஜெயலானி மகன் முகமது ஷேக் மைதீன் (21), முருகன் மகன் இசக்கிமுத்து (19, மகாராஜன் மகன் சோலையப்பன்(19), ஆகிய 5 பேரும் கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள படத்தை சேதப்படுத்தி தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து சித்திரவேல் குமார் அளித்த புகாரின்பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து  5 பேரையும் கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory