» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ கவிழ்ந்து பெண் பரிதாப சாவு: கர்ப்பினி மகள் கண் எதிரே பரிதாபம்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 3:58:35 PM (IST)

கோவில்பட்டியில் சாலை தடுப்பில் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்பினி மகளின் கண் எதிரே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பேச்சியம்மாள்(64) இவரது மகள் ஐஸ்வர்யா. இவருக்கு திருமணமாகி கொச்சியில் வசித்தார். தற்பொழுது கர்ப்பினி என்பதால் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று காலையில் பேச்சியம்மாள் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.  பரிசோதனை முடித்து விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த போது மாதங்கோவில சாலையின் நடுவே இருந்த தடுப்பில் ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் ஆட்டோவில் பயணம் செய்த பேச்சியம்மாள், ஐஸ்வர்யா இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஐஸ்வர்யா சிறு காயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த ஐஸ்வர்யாவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேச்சியம்மாள் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் லாயல்மில் காலனியை சேர்ந்த கணேசன் மகன் தங்கமாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory