» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர் கொலை : கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைப்பு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 1:56:15 PM (IST)

முறப்பநாடு வழக்கறிஞர் கொலையில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

முறப்பநாடு, சென்னல்பட்டி  தெற்கு தெருவைச்சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வேல்முருகன் (29) என்பவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த மற்றொரு சண்முகம் என்பவரின் மகன் செல்வம் (25) என்பவருக்கும் சென்னல்பட்டியில் உள்ள 14 செண்ட் நிலம் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 11ம் தேதி அன்று காலை 10 மணிக்கு செல்வம் மற்றும் சிலர் வேல்முருகன் வீட்டிற்குச் சென்று நிலப்பிரச்சனை சம்மந்தமாக பேச்சு வார்த்தை வருமாறு அழைத்து செல்வம் வீட்டில் வைத்து வேல்முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். 

இது குறித்து வேல்முருகன் தந்தை சண்முகம் (60) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து  செல்வத்தை கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் இளங்கோவன் முன் ஆஜர்படுத்தி, அவர் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர். மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக முறப்பநாடு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory