» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சந்திப்பு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 12:14:20 PM (IST)



பத்திரிக்கையாளர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தொிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா, டோல்கேட்டில் வாகனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநகர தலைவர் ஆர்.முருகன், செயலாளர் கி.ம.சங்கர், பொருளாளர் கே.ஞானதுரை, துணைத் தலைவர் ஜே.ஆனந்த், துணை செயலாளர் ஏ.வள்ளிராஜ், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.குமாரவேல் உட்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory