» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரிக்கை : சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 11:47:04 AM (IST)தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இதனை அங்கு வசிக்கும் சங்குகுளி தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த நிலத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டுள்ளனர். இதையடுத்து ஆக்கிரமிப்பிலிருந்து அந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். 

இதனைக் கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் சங்குகுளி தொழிலாளர் சங்கத்தலைவர் பரமசிவன் தலைமையில் திரளானோர் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெண்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சிபிஎம் மாவட்ட தலைவர் சங்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory