» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புது பைக் வாங்கியதற்கு பார்ட்டி தராததால் நண்பருக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது
திங்கள் 12, ஆகஸ்ட் 2019 5:50:45 PM (IST)
தூத்துக்குடியில் புது பைக் வாங்கியதற்கு பார்ட்டி தராததால் நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் ஐயன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி மகன் ஜெய பாலசுப்பிரமணியன்(46). இவர் ஒரு மாததிற்கு முன் மோட்டார் பைக் வாங்கியுள்ளார். இதற்காக பார்ட்டி வைக்க வேண்டும் என்று ஜெய பாலசுப்பிரமணியத்தின் நண்பரான முத்தையாபுரம் நாடார் தெருவைச் சேர்ந்த பால இசக்கிமுத்து(38) என்பவர் கேட்டுள்ளார். சம்பளம் வந்ததும் பார்ட்டி தருவதாக ஜெயபால சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி பால இசக்கிமுத்து, ஜெயபால சுப்பிரமணியனிடம் மீண்டும் பார்ட்டி கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் பால இசக்கிமுத்து, ஜெய பாலசுப்பிரமணியனை கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெய பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜபிரபு வழக்கு பதிவு செய்து பால்இசக்கிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூா் கோயில் விடுதியை இடித்து அகற்றும் பணி மும்முரம்
திங்கள் 9, டிசம்பர் 2019 8:26:50 AM (IST)

ஓடையில் தவறி விழுந்த மன நோயாளி உயிரிழப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 8:23:30 AM (IST)

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவினர் தயாராக இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
திங்கள் 9, டிசம்பர் 2019 8:14:25 AM (IST)

புறவழிச்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதல் : டிரைவர் காயம்
திங்கள் 9, டிசம்பர் 2019 8:10:27 AM (IST)

திமுக, அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 6:18:38 PM (IST)

தூத்துக்குடியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:15:55 PM (IST)

அருண்Aug 13, 2019 - 01:54:49 PM | Posted IP 162.1*****