» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒற்றை சாளர முறையில் அனைத்து வகை உரிமங்கள்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

புதன் 24, ஜூலை 2019 8:50:34 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்பு மற்றும் ஒப்புதல் ஆகியவை எவ்வித சிரமமுன்றி விரைந்து வழங்குவது தொடர்பான கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்பு மற்றும் ஒப்புதல் ஆகியவை எவ்வித சிரமமுன்றி விரைந்து வழங்குவது தொடர்பான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான வரைவுப்படுத்தவும், மேம்பாடு அடைய செய்திடவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்நிறுவனங்கள் நிறுவவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்து விரைந்து உரிமம் வழங்கிட ஒற்றை சாளர முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த கூட்டத்தில் அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்பு மற்றும் ஒப்புதல் ஆகியவை எவ்வித சிரமமுன்றி விரைந்து வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து விரைந்து அனுமதி பெற தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பட்டு திட்டம் நேர்காணல் நடைபெற்றது. அதில் செல்வகுமாரி என்பவருக்கு பெண்கள் அழகு நிலையம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க ரூ.34.12 இலட்சம் கடன் பெற வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, வங்கி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory