» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்

புதன் 24, ஜூலை 2019 8:40:52 AM (IST)தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழந்தை பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவது, கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 73 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் சுமார் 3,152 குழந்தைகள் தங்கியுள்ளார்கள். அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில்; சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாத இல்லங்களில் உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து இல்லங்களிலும் காவலர்கள் இருக்க வேண்டும். அவர்களது நடத்தைமுறைகள் ஆராய்ந்து பணியில் அமர்த்த வேண்டும். மேலும் திடகாத்திரமானவராக இருக்க வேண்டும். 

பெண்கள் பாதுகாப்பு மையங்களில் பெண்களை காவலராக நியமிக்க வேண்டும். குழந்தைகள் நலக்குழு அவ்வப்போது குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் வட்டாட்சியர்களும் தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்து அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சியில் உள்ள அரசு சுவர்களில் இணைவோம் குழந்தை பாதுகாப்புக்காக என்ற விழிப்புணர்வு ஓவியத்தை வரைய வேண்டும். சட்ட விரோத குழந்தை தத்தெடுப்பதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு பலகைகள் அமைத்தல், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அதிகமான குழந்தைகள் தங்கியுள்ள குழந்தைகள் இல்லங்களும், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள குழந்தைகள் இல்லங்களும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தி அவர்களது உடல்நலனை பேண வேண்டும். காவல் துறை மூலம் குழந்தைகளில் இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பின்னணிகள் குறித்து ஆராய்ந்து சான்றிதழ்கள் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் விளம்பரப்படுத்தி குழந்தைகளுக்கு தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் 3 வகையான குழந்கைள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார். அதனை முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வசந்தா (தூத்துக்குடி), லட்சுமணன் (திருச்செந்தூர்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் பரிதா செரின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நி.சையத் முஹம்மத் மற்றும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory