» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனிதனை விண்வெளிக்கு அனுப்ப ககன்யான் திட்டம் : இஸ்ரோ மைய திட்ட இயக்குநர்

புதன் 24, ஜூலை 2019 8:17:31 AM (IST)

மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் திட்டமான "ககன்யான் திட்டத்தை மேற்கொள்ளும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது என்று மகேந்திரகிரி இஸ்ரோ மைய திட்ட இயக்குனர் மூக்கையா கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் 6 ஆயிரம் கிலோ மீட்டர் அதிகமான தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 மூன்று நிலைகளில் தனது ஆய்வை மேற்கொள்ளும். முதல் நிலையான ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் எனும் நிலை தனியே பிரிந்து நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை தரையிறங்கும். அதனைத் தொடர்ந்து அதில் இருந்து ரோவரானது தனியே பிரிந்து நிலவில் 500 மீட்டர் பரப்பளவில் ஆய்வை மேற்கொள்ளும்.

லேண்டர் பகுதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதும் பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்துக்கு தகவல் அனுப்பும். அதைத் தொடர்ந்து, நிலவின் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்படும். சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுக்கான எரிபொருள் தயாரிப்பு மகேந்திரகிரி மையத்தில் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் திட்டமான "ககன்யான் திட்டத்தை மேற்கொள்ளும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது என்றார் அவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamAnbu Communications

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory