» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

யூனியன் அலுவலக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதன் 24, ஜூலை 2019 8:07:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் யூனியன் அலுவலகங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாநில தலைவராகவும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவராகவும் உள்ளார்.இவர் கடந்த மே மாதம் 31-ம் தேதி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும், அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்டத்தில் யூனியன் அலுவலகங்களில் ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து, யூனியன் அலுவலக கூட்டரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் சுப்பையா, வட்டார தலைவர் மணிகண்ட பிரகாஷ், செயலாளர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் திவான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கயத்தாறு, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், விளாத்திகுளம், புதூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட யூனியன் அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பல்வேறு தேவைகளுக்காக யூனியன் அலுவலகங்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory