» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாலுகாஅலுவலகம் முன் பேருந்துகள் நிற்க வேண்டும் : காங்கிரஸ் கட்சி கோரிக்கை

செவ்வாய் 23, ஜூலை 2019 6:35:13 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் புதிய தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கருங்குளம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம்  தாலூகா அலுவலகம்  மிகவும் பழமையானது. இந்த அலுவலகம் இயங்கிய இடத்தில் போதிய இட வசதி இல்லை என புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இதற்கிடையில் 2 கோடியே 39 லட்சத்து 32 ஆயிரத்து 680 ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்ட ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு  அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது அனைத்து வசதிகளுடன் இந்த  கட்டடத்தினை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம்  ஜூலை மாதம் 6 ந்தேதி திறந்து வைத்தார். அதன் பின் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் அலுவலகத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளை பார்வையிட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். 

ஆதார் கார்டு எடுப்பது, இ சேவை மையம்  தவிர்த்து அனைத்து  பணிகளும் தற்போது புதிய தாலுகா அலுவலகத்தில்  நடந்து வருகிறது. பெரும்பாலும் இந்த அலுவலகத்துக்கு கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31  பஞ்சாயத்தினை சேர்ந்தவர்  பயன்பெற வேண்டியது உள்ளது. இவர்கள் நெல்லை & திருச்செந்தூர் பேருந்து மூலம் தாலுகா அலுவலகம் வருகிறார்கள். ஆனால்  பேருந்துகள் புதிய தாலுகா அலுவலகம் முன்பு நிற்பதில்லை. எனவே புதுக்குடியில் இறங்கி சுமார் 1 கிலோ மீட்டர் நடந்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளது என கூறப்படுகிறது.

இதுகுறித்து கருங்குளம் ஒன்றியம் கிளாக்குளம் காங்கிரஸ் பிரமுகர் குழந்தை ஆழ்வார் கூறும் போது, பெரும்பாலுமே கருங்குளம் ஒன்றிய சுற்று பகுதியில் உள்ள மக்கள் ஸ்ரீவைகுண்டம் செல்லும் அனைத்து வாகனங்களும் ஸ்ரீவைகுண்டம் புதிய தாலூகா அலுவலகம் முன்பாகத்தான் செல்கிறது. ஆனால் இந்த இடத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நின்று செல்வது இல்லை. இதுகுறித்து தாலூகா அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, முறைப்படி தாசில்தார் போக்குவரத்து அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் நடவடிக்கை எடுப்பார் என கூறி வருகிறார்கள்.  தற்போது  தாலுகா அலுவலகம் திறந்து 1 மாதமாகியும்  பேருந்துகள் நிற்பதில்லை.  

புதுக்குடியில் இறங்கி 1 கிலோ மீட்டர் நடந்து வந்தே அலுவலத்தினை அடைய முடிகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய தாலுகா அலுவலகத்தில் அனைத்து அரசுபேருந்து, டவுண் பேருந்து , தனியார் பேருந்து நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.  புதிய தாலுகா அலுவலகத்தில் அனைத்து வசதிகள் இருந்தும் கூட, பேருந்து நிறுத்தம் வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதியுறுகிறார்கள். எனவே உடனடியாக ஸ்ரீவைகுண்டம் புதிய தாலுகா அலுவலகம் முன்பு பேருந்துகள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes


CSC Computer Education

Thoothukudi Business Directory