» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதியாளர்களின் கூட்டம்
செவ்வாய் 23, ஜூலை 2019 5:39:02 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ் நாடு மீன் வளத்துறை மற்றும் கடல் பொருள் மற்றும் முன்னேற்ற ஆனையம் சார்பில் கடல் உணவு ஏற்றுமதியாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 14 கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து 16 பேர் கலந்து கொண்டனர். மீன்வளக் கல்லூரிமுதல்வர் வேலாயுதம் வாழ்த்துரை வழங்கி, தொழிற்சாலை நிறுவனம் இணைந்து கடலுணவு ஏற்றுமதியில் உள்ள சவால்களை எதிர்க்கொள்வதற்கான அவசியத்தை கூறினார். உதவி பேராசிரியர் கணேசன், சுகாதார முறையில் மீன் கையாளுதல் குறித்து எடுத்துரைத்தார். பேராசிரியர் மற்றும் தலைவர், இரா. ஜெய ஷகிலா, மீன் தர உறுதிபாடு மற்றும் மேலாண்மைத்துறை TNJFU பரிந்துரை ஆய்வகத்தின் உள்ள மீன் பாதுகாப்பு மற்றும் தரத்தை கண்டறியும் சோதனை குறித்து விளக்கம் அளித்தார். மேலும் இவ்வாய்கத்தின் சேவை மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
மீன்வளத் துறை இணை இயக்குநர் நா. சந்திரா, வரவேற்றார். மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளங்களில் உள்ள வசதிகள் குறித்து கூறினார். மேலும் பயன்பாட்டில் இல்லாத ஏலக்கூடம், குளிர்பதன அறை, குழாய் பனிக்கட்டி நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர கேட்டுக்கொண்டார். கடல் பொருள் மற்றும் முன்னேற்ற ஆனையம், உதவி இயக்குனர் அஞ்சு, ஏற்றுமதியாளர்களிடம் கடலுணவு ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் குறித்து கலந்தாலோசித்தார். ஏற்றுமதியாளர்கள், மீன்பிடி துறைமுகத்தின் சுகதாரத்தை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பனிக்கட்டி, பெட்டி சேமிப்பதற்கான அறையும் மீன் இறங்குதளைங்களில் நண்டுகளை சமைப்பதற்கான வசதியும் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மீன்துறை உதவி இயக்குநர் அன்டோ பிரின்சி வயலா நன்றியுறை வழங்கினார்.
மக்கள் கருத்து
சாப்பாடு ராமன்Jul 24, 2019 - 12:34:31 PM | Posted IP 162.1*****
நிஹா அவர்களே பணத்துக்காக கடலில் உயிர்வாழ் உயிரினங்களை சுரண்டி இயற்கை யை அழிப்பது போன்றதாகும் , மீன் பண்ணை அமைத்து ஏற்றுமதி மட்டும் பண்ணலாம் ஆனால் மக்களுக்காக குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டிய மீன்கள் எல்லாம் பணத்துக்காக போகிறது , நம் உடம்பும் சத்து இல்லாமல் போய்விடும் , பணத்துக்காக நாடே அழிவு நிச்சயம்
நிஹாJul 24, 2019 - 09:24:50 AM | Posted IP 173.2*****
ஏற்றுமதியால் மீன் பிடிப்பவர்களின் வருமானமும் சற்று உயர்கிறதுதானே?
சாப்பாடு ராமன்Jul 23, 2019 - 07:25:55 PM | Posted IP 173.2*****
ஏற்றுமதியால் தான் எல்லா ஊரிலும் பொதுமக்களுக்கு மீன்கள் குறைந்த விலையில் கிடைக்காமல் போய்விட்டது .. கார்பொரேட் கு மட்டும் லாபம்
மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருட்டு வழக்கில் சகோதரர்கள் உட்பட 4பேர் கைது - கார் பறிமுதல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:45:26 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு : நண்பர் படுகாயம்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:32:15 AM (IST)

முன்விரோதத்தில் இளைஞர்கள் மோதல்: 2பேர் கைது
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:14:39 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு எரிவாயு உருளை விலை நிர்ணயம்: கூடுதல் ஆட்சியர் தகவல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:38:51 AM (IST)

பிரகாசபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலவச சீருடைகள் வழங்கும் விழா!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 7:57:55 AM (IST)

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 113 பேர் வேட்பு மனுத்தாக்கல்
திங்கள் 9, டிசம்பர் 2019 8:04:47 PM (IST)

சாப்பாடு ராமன்Jul 24, 2019 - 12:37:01 PM | Posted IP 162.1*****