» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புன்னைக்காயல் கிராமத்திற்கு ரூ.3 கோடியில் குடிநீர் திட்டம்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 23, ஜூலை 2019 8:04:45 AM (IST)

புன்னைக்காயல் கிராமத்திற்கு ரூ. 3 கோடியில் புதிய குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால் பந்தாட்ட போட்டியின் காலிறுதிப் போட்டியை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது; புன்னைக்காயலில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 3 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கிராம மக்களின் பங்களிப்பாக (30 சதவீதம்) ரூ. 72 லட்சம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கப்பல் மாலுமிகள் சங்கத்தினர் பெருமளவில் உதவியுள்ளனர். இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெறும். இந்த ஊராட்சிக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 
 
நிகழ்ச்சிக்கு புன்னைக்காயலிலில் பங்குத் தந்தை கிஷோக் அடிகளார் தலைமை வகித்தார். இதில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, வட்டாட்சியர் தில்லைபாண்டி, மண்டல துணை வட்டாட்சியர் கோபால், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாரத், வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், ஆத்தூர் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லிலி தேவ் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் பொன்செல்வி, புன்னைக்காயல் ஊர்த் தலைவர் செல்ட்டன், துறைமுக கமிட்டி தலைவர் இளங்கோ, அகில இந்திய கப்பல்மாலுமிகள் சங்க துணைத் தலைவர் விமல்சன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். முன்னாள் தலைமை அசிரியர் ரொங்காலி சில்வா வரவேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Black Forest CakesNalam Pasumaiyagam

Anbu CommunicationsThoothukudi Business Directory