» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 3½ ஆண்டில் இளம்பெண் தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை

செவ்வாய் 23, ஜூலை 2019 8:02:27 AM (IST)

கயத்தாறு அருகே திருமணமான 3½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியைச் சேர்ந்தவர் மாடசாமி (27) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி மகள் கிருஷ்ணவேணி (23). பட்டதாரியான இவருக்கும், மாடசாமிக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகன் பிரதீப் (2½). திருமணத்துக்கு பின்னர் கிருஷ்ணவேணி தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணவேணி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் அங்குள்ள கோவிலில் கொடை விழா நடந்தது. கிருஷ்ணவேணிக்கு வயிற்று வலி இருந்ததால், அவர் கோவிலுக்கு செல்லவில்லை. எனவே மாடசாமி மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் மாடசாமி தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது, அங்கு மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த கிருஷ்ணவேணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3½ ஆண்டுகளில் கிருஷ்ணவேணி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer EducationBlack Forest CakesThoothukudi Business Directory