» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
செவ்வாய் 23, ஜூலை 2019 7:54:54 AM (IST)
தூத்துக்குடியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட ராஜகோபால்நகர் பகுதிக்கு கடந்த 4 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜகோபால்நகர் பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை அண்ணாநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் குடில்கள் தயாாிக்கும் பணி மும்முரம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:42:13 PM (IST)

தூத்துக்குடியில் நாளை இலவச மருத்துவ முகாம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:30:15 PM (IST)

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: முன்னாள் படை வீரர்களுக்கு எஸ்பி அழைப்பு
வெள்ளி 13, டிசம்பர் 2019 3:19:10 PM (IST)

மீனுக்காக போட்ட தூண்டிலில் சிக்கிய மலைப்பாம்பு!!
வெள்ளி 13, டிசம்பர் 2019 3:10:18 PM (IST)

கனமழையால் சேறும் சகதியுமான திருச்செந்தூர் ரோடு : பேருந்துகள் செல்ல தொடரும் தடை
வெள்ளி 13, டிசம்பர் 2019 12:46:35 PM (IST)

கோழி திருட முயன்ற கணவன்- மனைவி உட்பட3பேர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 12:42:30 PM (IST)
