» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே திமுக நிர்வாகி வெட்டி படுகாெலை : போலீஸ் விசாரணை

திங்கள் 22, ஜூலை 2019 7:01:59 PM (IST)

தூத்துக்குடி அருகே திமுக நிர்வாகி வெட்டி படுகாெலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

குலையன்கரிசலை சேர்ந்தவர் வேல்சாமி மகன் கருணாகரன் (55). இவர் தூத்துக்குடி யூனியனில் முன்னாள் சேர்மனாக இருந்தவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர். தற்போது திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் அங்குள்ள தோட்டத்திலிருந்து கருணாகரன் வெளியே வரும் போது ஒரு மர்மகும்பல் திடீரென அவரை வழிமறித்து வெட்டியது. இதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் புதுக்கோட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் திருமலை தலைமையில் அங்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தூத்துக்குடி எஸ்பி., அருண் பாலகோபாலன், ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோத்தினால் இக்கொலை நடைபெற்றதா, அரசியல் காரணமாக நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காெலைக்கான காரணம் ?

படுகொலை செய்யப்பட்ட கருணாகரன் முத்தையாபுரத்தில் நகை அடகுகடை நடத்தி வந்துள்ளார். இதில் நகை அடமானம் வைத்தவர்கள் பணம் செலுத்திய பின்பும் நகையை திருப்பி அளிக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் குலையன்கரிசல் கிராமத்தில் உள்ள  விவசாய சங்கத்தில் ஏற்பட்ட தகராறில் சென்ற 4 தினங்களுக்கு முன் விவசாய சங்கத்தை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டாராம்.

அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராக கருணாகரன் செயல்பட்டு வந்துள்ளார்.  மேலும் இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பணம் பட்டுவாடா விவகாரத்தை இவர் தான் கவனித்து வந்ததாகவும் இதில் சில பிரச்சனைகள் நடந்ததால் அனிதா.ராதாகிருஷ்ணன் இவரை விட்டு விலகி விட்டதாகவும் மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபருக்கு கள்ளதுப்பாக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர் கொலைக்கான காரணம் இதில் ஏதாவது ஒன்றாக இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குலையன்கரிசலை சுற்றியுள்ள கிராமங்களில் பதட்டம் இருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam



Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory