» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரப்பேட்டை பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழா : எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்பு

திங்கள் 22, ஜூலை 2019 5:55:54 PM (IST)தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 342 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார். 

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா புரவலர் பழரசம் விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைவர் நவநீதன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 342 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கி பேசினார். 

விழாவில் மாவட்ட  இலக்கிய அணி செயலாளர் நடராஜன் முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், மாவட்ட பாசறை பொருளாளர் தனராஜ், மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ், கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் மீளவிட்டான் சுதாகர், மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, நிர்வாகிகள் ஜெயகணேஷ், கே.ஏ.பி.ராதா மனோஜ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், சந்தனப்பட்டு, மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியை, மாணவிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory