» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் பிரச்சனையில் பெண்ணை தாக்கிய தம்பதிக்கு போலீஸ் வலை

ஞாயிறு 21, ஜூலை 2019 5:10:02 PM (IST)

சாத்தான்குளம் அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில்  பெண்ணை தாக்கிய கணவன் மனைவியை போலீசார் தேடி வருகின்றன். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழையை சேர்ந்தவர் ஜார்ஜ் மனைவி ஸ்வீட்டா (47). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வெண்ணிலா என்பவர் ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் சம்பவத்தன்று வெண்ணிலா வீட்டுக்குச் சென்று பணத்தை திருப்பித் தருமாறு ஸ்வீட்டா கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெண்ணிலா அவரது கணவர் ராஜேந்திரன் ஆகியோர் ஸ்வீட்டாவை தாக்கினார்களாம். இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தட்டார்மடம் எஸ்ஐ சுரேஷ்குமார் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட தம்பதியை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education

Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory