» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மைனர் பெண்ணுக்கு திருமணம் : 4 பேர் மீது வழக்கு
ஞாயிறு 21, ஜூலை 2019 11:53:47 AM (IST)
தூத்துக்குடியில் மைனர் பெண்ணுக்கு திருமணம் நடத்தியதாக மணமகன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மேலகூட்டுடன்காடு பகுதியினை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சேகர். (23). இவருக்கும் ஆறுமுகநேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 8ம் தேதி அல்லிக்குளம் முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை எனவும் கட்டாயதிருமணம் செய்து வைத்ததாக சமூகநலத்துறை அதிகாரி பேச்சியம்மாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி அதிகாரி பேச்சியம்மாள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, விசாரணை நடத்தியதில் மணப்பெண்ணுக்கு 18 வயது முடிய 2 மாதம் இருப்பதாகவும் அதற்குள் திருமணம் நடத்தியதாக சேகர், அவரது தந்தை பரமசிவம், தாயார் பார்வதி, சகோதரி செல்வராணி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் குடில்கள் தயாாிக்கும் பணி மும்முரம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:42:13 PM (IST)

தூத்துக்குடியில் நாளை இலவச மருத்துவ முகாம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:30:15 PM (IST)

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: முன்னாள் படை வீரர்களுக்கு எஸ்பி அழைப்பு
வெள்ளி 13, டிசம்பர் 2019 3:19:10 PM (IST)

மீனுக்காக போட்ட தூண்டிலில் சிக்கிய மலைப்பாம்பு!!
வெள்ளி 13, டிசம்பர் 2019 3:10:18 PM (IST)

கனமழையால் சேறும் சகதியுமான திருச்செந்தூர் ரோடு : பேருந்துகள் செல்ல தொடரும் தடை
வெள்ளி 13, டிசம்பர் 2019 12:46:35 PM (IST)

கோழி திருட முயன்ற கணவன்- மனைவி உட்பட3பேர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 12:42:30 PM (IST)
