» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தாெகை பெற விண்ணப்பிக்கலாம்

ஞாயிறு 21, ஜூலை 2019 9:36:47 AM (IST)

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காமல் காத்திருப்போருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200 ம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு மாதம் ரூ. 300 ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400  ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை  வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இத்தொகை நேரடியாக மனுதாரர்களின் (ஆதார் இணைக்கப்பட்ட) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித் தொகை பெற தகுதியானவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டைஆகியவற்றுடன் தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல்தெருவில் பாண்டியன் கிராம வங்கியின் பின்புறமுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து வேலை நாள்களிலும் விண்ணப்பம் வழங்கப்படும். உதவித்தொகை பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory