» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை: மாணவர் வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு
ஞாயிறு 21, ஜூலை 2019 9:33:12 AM (IST)
ஆறுமுகனேரி அருகே காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்தார். இதையடுத்து மாணவர் வீட்டை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மங்களவாடி சள்ளித்திரடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவருக்கு இரு மகள்கள். பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த இவரது மகள் கெளரியும் (19), அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்துருவும் காதலித்து வந்தனராம். அதை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கெளரி தீக்குளித்ததையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப் பதிந்து சந்துருவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே 7 பேர் கொண்ட கும்பல் சந்துரு வீட்டுக்குள் புகுந்து வீட்டின் இருந்த பொருள்களை சேதப்படுத்தினராம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடு திருட்டு வழக்கில் சகோதரர்கள் உட்பட 4பேர் கைது - கார் பறிமுதல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:45:26 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு : நண்பர் படுகாயம்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:32:15 AM (IST)

முன்விரோதத்தில் இளைஞர்கள் மோதல்: 2பேர் கைது
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:14:39 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு எரிவாயு உருளை விலை நிர்ணயம்: கூடுதல் ஆட்சியர் தகவல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:38:51 AM (IST)

பிரகாசபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலவச சீருடைகள் வழங்கும் விழா!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 7:57:55 AM (IST)

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 113 பேர் வேட்பு மனுத்தாக்கல்
திங்கள் 9, டிசம்பர் 2019 8:04:47 PM (IST)

நிஹாJul 22, 2019 - 11:53:19 AM | Posted IP 173.2*****