» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் பகுதியில் மின் முறைகேடு: ரூ.48,000 அபராதம்

ஞாயிறு 21, ஜூலை 2019 9:28:48 AM (IST)

திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் மின் முறைகேட்டில் ஈடுபட்டோரிடம் ரூ. 48 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூர் கோட்டத்தில் மின் அதிகாரிகள் கடந்த 16ஆம் தேதி மாதாந்திர கூட்டுக்குழு ஆய்வு நடத்தினர். 

இதில், 8 மின்னிணைப்புகளில் மின்சாரம் தவறான முறையில் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ. 31 ஆயிரத்து 433 வசூல் செய்யப்பட்டது. இதேபோல், சாத்தான்குளம் உபகோட்டத்தில் மாதாந்திர கூட்டுக்குழு நடத்திய ஆய்வில், 5 மின்னிணைப்புகளில் மின்சாரம் தவறான முறையில் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 17 ஆயிரத்து 473 வசூல் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest Cakes



Anbu Communications



Thoothukudi Business Directory