» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல் பங்கில் ரூ.30 ஆயிரம் திருட்டு: போலீஸ் விசாரணை

ஞாயிறு 21, ஜூலை 2019 9:23:09 AM (IST)

திருச்செந்தூர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், பகத்சிங் பேருந்து நிலையம் எதிர்புறம் ஹரிகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு இரவு, பணத்தை பையில் வைத்து அறையில் வைத்து விட்டு பணியாளர்கள் தூங்கச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பணம் இருந்த பை மாயமானது. இந்நிலையில், பையில் இருந்த ரூ. 30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள், திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகே பையை வீசிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



CSC Computer Education

Anbu Communications



Thoothukudi Business Directory