» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 6ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர் : தூத்துக்குடி மாவட்ட மேலாளர் தகவல்

வெள்ளி 19, ஜூலை 2019 5:50:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3 மாதங்களில் 6000க்கும் மேல் பயன் பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் ஜோன்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடந்த 3 மாதங்களில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 6000க்கும் மேல் நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்தியுள்ளதாக 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளராக பணிபுரியும் ஜோன்ஸ் தங்களது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 108 சேவை கடந்த செப்டம்பர் மாதம் 2008ம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு தற்பொழுது மாநிலம் முழுவதும் 926 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. 

நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 18 ஆம்புலன்சுகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது. அதில் 2 பச்சிளம் குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இன்குபேட்டர் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் உள்ளது. மற்றும் மற்ற தனியார் வாகனங்களில் ஆக்சன் வசதியை தவிர வேறு எந்த ஒரு வசதியும் இல்லாத நிலையில் நமது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ளேயே முதல் உதவி செய்வதற்கு வசதியாக அவசர கால மருத்துவ உதவியாளர் உடன் வென்டிலேட்டர் இசிஜி மல்டி பாரா மானிட்டர் மற்றும் அவசர காலங்களில் உயிர் காக்கக்கூடிய 50க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதால் நோயாளி சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனைக்க கொண்டு செல்லும் வழியில் அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார். 

நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளார்கள். பொதுமக்கள் அழைக்கும் இடம் எளிதில் கண்டறிவதற்கு வசதியாக "AVASARAM 108” எனும் மொபைல் ஆப் வசதி கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து 108 சேவை மையத்தை அழைக்கும் பொழுது இன்னும் விரைவில் எங்களால் அலைபவர்கள் இடத்தினை சென்றடைய முடியும் என 108 ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu CommunicationsBlack Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory