» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மின்னனு அமைப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

வெள்ளி 19, ஜூலை 2019 5:07:23 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகமும் மற்றும் இந்திய துறைமுக குழுமமும் இணைந்து இந்திய பெருந்துறைமுகத்தின் மின்னனு செயல்பாடின் புதிய 1x பதிப்பு செயலியின் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் இன்று துறைமுக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, எஸ். சாந்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருந்தரங்கை துவக்கி வைத்தார். இக்கலந்தாய்வில் பெருந்துறைமுகங்களின் மின்னனு செயல்பாடு 1X ஒரே வர்த்தக மேடையில் கடற்சார் சமூகத்தில் 27 பங்குதாரர்களை ஒருங்கிணைந்த இந்த புதிய பதிப்பு செயலியின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை பற்றிய விளக்கத்தினை இந்த செயலியை செயல்படுத்தும் மும்பையை சார்ந்த போர்ட் ஆல் (Pழசவயடட) இன்வோசிஸ்டம் பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திய துறைமுக குழுமத்தின் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் இச்செயலியின் அறிவிப்பு அமைப்புகள், கண்காணிக்கும் வசதி, பாதுகாப்பு வசதிகள் மற்றும் இணையதளம் மூலமாக கட்டணங்களை செலுத்துதல் போன்ற வசதிகளை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் துறைமுகங்களின் மின்னனு செயல்பாடு 1X செயலின் மூன்றாம் தரப்பு மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் சுங்கதுறையுடனான மேம்பட்ட தகவல்தொடர்பு வசதிகளை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட துறைமுக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த செயலியின் அம்சங்களை பற்றி கலந்தாய்வு செய்து தெரிந்து கொண்டனர், இதன் மூலம் இந்த செயலியின் புதிய பயனாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

 வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கீ. இராமசந்திரன், இச்செயலியின் தூரித செயல்பாட்டின் மூலம் சரக்குகள் துறைமுகங்கள் மற்றும் அனைத்து சரக்கு தளவாடங்கள் மூலம் கடந்து செல்லும் நேரத்தை வெகுவாக குறைப்பது மட்டுமல்லாமல் இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு உலகளவில் குறைந்த செலவில் வர்த்தம் செய்வதற்கு பயனுள்ளதாக அமையும் என்று கூறினார். இந்த விளிப்புணர்வு கலந்தாய்வில் சுங்கத்துறை முகவர்கள், கப்பல் முகவர்கள், சரக்கு கையாளும் முகவர்கள், இயந்திரம் இயக்குபவர்கள், சரக்குபெட்டக நிலையம், வணிக கடல்துறை, துறைமுக சுகாதார அமைப்பு மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைத்து தளவாடங்களை இணைக்க கூடிய பொது மற்றும் தனியார் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் தனித்து இயங்கும் வசதியை பெற்ற இச்செயலி, 12 இந்திய பெருந்துறைமுகங்களிலும் டிசம்பர் 2018ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செயலினை இந்திய அளவில் 14,000 மேற்பட்ட சுங்கதுறை, வங்கி கணக்கு, கப்பல், சரக்கு கையாளும் மற்றும் வெளியேற்றுவர்கள் ஆகிய உபயோகிப்பாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.துறைமுக மின்னனு செயல்பாடின் புதிய 1x பதிப்பின் மூலம் சரக்கு தளவாடங்கள் மூலம் கடந்து செல்லும் நேரத்தை வெகுவாக குறைப்பது, காகித பயன்பாடு குறைவது மற்றும் சரக்கு கையாளும் வெவ்வேறு தளவாடங்களின் நிகழ்வுகளை உபயோகிப்பாளர்கள் உடனுக்குடன் அறிவதற்கு உறுதுணையாக அமையும். மேற்சொன்ன தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory