» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் அளிக்க வேண்டும் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 19, ஜூலை 2019 3:40:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் ரூ.1500/- பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் மற்றும் உரிய சான்றுகளை 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளது தேதி வரை ஆதார் எண்ணை சமர்ப்பிக்காத பயனாளிகள் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்), கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் வாழ்நாள் சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (அசல் மற்றும் நகல்), உதவித்தொகை பெற்று வரும் வங்கி கணக்கின் புத்தகம் (அசல் மற்றும் நகல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2 (பாதுகாவலர் மற்றும் மாற்றுத்திறனாளி) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பாதுகாவலர் மட்டும் 31-07-2019க்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளி நேரில் வரத்தேவையில்லை. இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நள்ளிரவில் வாகனம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு : தூத்துக்குடியில் பரபரப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 1:47:48 PM (IST)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் பட்டியல் : சமத்துவ மக்கள் கழகம் அனிதாராதாகிருஷ்ணனிடம் வழங்கல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 1:27:22 PM (IST)

ஆடு திருட்டு வழக்கில் சகோதரர்கள் உட்பட 4பேர் கைது - கார் பறிமுதல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:45:26 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு : நண்பர் படுகாயம்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 11:32:15 AM (IST)

முன்விரோதத்தில் இளைஞர்கள் மோதல்: 2பேர் கைது
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:14:39 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு எரிவாயு உருளை விலை நிர்ணயம்: கூடுதல் ஆட்சியர் தகவல்
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:38:51 AM (IST)
