» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை

வெள்ளி 19, ஜூலை 2019 11:11:39 AM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகள் கற்பகம் (19). தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றவர் மாலையில் வீடுதிரும்ப வில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. 

இதுகுறித்து கணேச மூர்த்தி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நேதாஜி நகரைச் கண்ணன் என்பவருடன் கற்பகத்திற்கு பழக்கம் இருந்துள்ளதாகவும், இருவரும் ஊரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory