» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய முதியவர் கைது

வெள்ளி 19, ஜூலை 2019 11:01:53 AM (IST)

கோவில்பட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது, இது தொடர்பாக 74 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பகுளம் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் ரத்தினம் (74). இவர் அப்பகுதியில் சலூன்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி அருணாதேவி (40) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில், ஆத்திரம் அடைந்த ரத்தினம், அருணாதேவியை கத்தியால் குத்தினராம். இதில் படுகாயம் அடைந்த அருணாதேவி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு  காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அவுடையப்பன் வழக்குப் பதிந்து ரத்தினத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory