» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்து : மீனவர் பரிதாப சாவு

வெள்ளி 19, ஜூலை 2019 10:55:07 AM (IST)

தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி, பாத்திமா நகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குரூஸ் மகன் பிலிப் (50). மீனவரான இவர் நேற்று இரவு 10 மணியளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அன்னம்மாள் கல்லூரி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory