» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்: இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

வெள்ளி 19, ஜூலை 2019 10:30:45 AM (IST)

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னால் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கஜேந்திரன் வழக்குகளை சரிவர விசாரிப்பதில்லை எனவும், வக்கீல்களை மதிக்க தவறுவதாகவும் சாத்தான்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜேசுதுரை என்பவர் உயர் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 19ம் தேதி சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு வந்த போது அங்கு நின்ற வழக்கறிஞர் ஜேசுதுரைக்கும், இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது இன்ஸ்பெக்டர், வக்கீலை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், வக்கீலை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கறிஞர் ஜேசுதுரை அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் நீதித்துறை நீதிமன்ற நடுவரின் உத்தரவுபடி காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது 294 (b), 506 (i) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் சாத்தான்குளம்  காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Anbu Communications


CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory