» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா ஆலயத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : எஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சனி 13, ஜூலை 2019 3:56:35 PM (IST)



தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26ம் தேதி தொடங்கி ஆக.5ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள அரங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. க்கூட்டத்தில், ஆலய வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம் அமைத்திடுதல், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் அமைத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

மேலும், சாலையோரக் கடைகள் ஒருபுறம் மட்டும் அமைத்திடுதல், புறக்காவல் நிலையத்தில் உள்ள ஒளித்திரை முலம் கண்காணிக்கும் வகையில் அமைத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்திடுதல், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் அடங்கிய மருத்துவக்குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்தல், பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் தற்காலிக மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டம் தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் பனிமய மாதா கோவில் பங்கு தந்தை குமார் ராஜா முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், குழந்தைகள் பள்ளி பங்குதந்தை வில்லியம் சந்தானம், திரேஸ்புரம் பங்குதந்தை நோயல், காவல் ஆய்வாளர்கள் மாவட்ட தனிப்பிரிவு பாலமுருகன், தென்பாகம் ஜீன்குமார், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் சிவசெந்தில்குமார், தெர்மல் நகர் ரஞ்சித்குமார், தாளமுத்து நகர் சார்லஸ், தென்பாகம் குற்றப்பிரிவு கிருஷ்ணகுமார், மத்தியபாகம் குற்றப்பிரிவு வனிதா, போக்குவரத்துப்பிரிவு சிசில், ஆயுதப்படை மகேஷ் பத்மநாபன் ஆகியோர் மற்றும் தீயணைப்பு துறையினர், மின் வாரியத்தினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சிதுறையினர், உணவு பாதுகாப்பு துறையினர் உட்பட சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam



Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education



Thoothukudi Business Directory