» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சோபியா வழக்கில் காவல்துறை அதிகாரிகள் ஆஜர் : விசாரணை செப்.6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளி 12, ஜூலை 2019 5:04:07 PM (IST)

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தை சாமி, மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை செப்.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றபோது, அதே விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் மேற்கொண்டார். அப்போது சோபியா, பாஜக ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் அளித்தார். இதையடுத்து உடனடியாக,  மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. தமிழிசைக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் அனைத்துக் கட்சியினராலும் கண்டன அறிக்கைகள் விடப்பட்டன. சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் என பலரும் சோபியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சோபியா, தூத்துக்குடி நடுவர் நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனையற்ற ஜாமீனில் வெளிவந்தார். 

இதையடுத்து, சோபியா கைது தொடர்பாகவும், தமிழிசை மீது அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலைக்கழித்ததாகவும் சோபியாவின் தந்தை சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சாமி,  மற்றும் எதிர் மனுதாரர்கள் தூத்துக்குடி ஏடிஎஸ்பி பொன்ராம், டிஎஸ்பி பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை, பாஸ்கர், அன்னத்தாய், உதவி ஆய்வாளர்கள் நம்பி, லதா ஆகியோர் ஆஜரானார்கள். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற செப்.6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சுப.இராமச்சந்திரன், பெ.சந்தனசேகர் ஆஜரானார்கள்.


மக்கள் கருத்து

கொமாரு அவருக்குFeb 11, 1563 - 09:30:00 PM | Posted IP 108.1*****

அவ விமானத்தில் பறக்குமோது கோசம் போடல , வெளிய தான் கோசம் போட்டாரு , அதை கண்டு டுமிழிசை வயிறு எரியுதாம் ...மற்ற அறிவுள்ள டாக்டர்கள் எல்லாம் டுமிழிசை மாதிரி இருக்கமாட்டார்கள் ..

குமார் அவர்களுக்குFeb 9, 1563 - 01:30:00 AM | Posted IP 108.1*****

படிக்கிற வயசு பொண்ணுக்கு தண்டனை தேவை இல்லை ...

குமார்Jul 13, 2019 - 01:02:18 PM | Posted IP 162.1*****

விமானத்தில் கோசம் போடக்கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இப்பென்னிற்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கவேண்டும்.....

ஒருவன்Jul 13, 2019 - 11:07:27 AM | Posted IP 173.2*****

படித்து டாக்டர் ஆனால் புத்தி இல்லை , டாக்டர்களுக்கு சண்டை போடும் குணம் இருக்காது ..

நாய் சேகர் அவர்களுக்குJul 13, 2019 - 11:06:29 AM | Posted IP 173.2*****

டுமிழிசை மகனும் கோஷம் போட்டார் .. அவனுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியது தானே ...

ஆசீர். விJul 13, 2019 - 10:21:57 AM | Posted IP 162.1*****

இதே போன்ற நிகழ்வு தான் சென்னை விமானநிலையத்தில் தமிழசைக்கும் அவரது மகனால் நடந்தது. ஆனால் ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு. இது தான் பாஜகவின் கொள்கை

சேகர்Jul 13, 2019 - 10:17:33 AM | Posted IP 173.2*****

ஸபிய்யா வாய் கொழுப்பு அடக்கப்படவேண்டும். கோர்ட்டில் தண்டனை கொடுக்க வேண்டும்

இவன்Jul 12, 2019 - 06:07:35 PM | Posted IP 162.1*****

அடேய் நீதிமன்றம் என்ற வாயாடி மன்றம் , அவ படிக்கிற புள்ளை தான் வெறும் வாயில் கோஷம் மட்டும் தான் சொல்லிச்சு ... விட்டு விடுங்கடா ..... தமிழிசை அவர்களே பிடிக்கவில்லை என்றால் பேசாமல் போக வேண்டியது தானே... சின்ன பிரச்சனையை ஊதி பெரிதாக்குவது எல்லாம் பிஜேபி யின் வேலையாகி போச்சு .....நாட்டில் நிறைய பிரச்னை உண்டு நிறைய வழக்குகள் தேங்கி உள்ளது அதை சரியாக பாருங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer EducationAnbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory