» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்தாலங்குறிச்சி குளத்து மண் வெளியேற்றப்படாது : ஆட்சியர் உறுதி - பெண்கள் மகிழ்ச்சி

வெள்ளி 12, ஜூலை 2019 4:31:51 PM (IST)



முத்தாலங்குறிச்சி குளத்து மண்ணை வெளியேற்ற மாட்டோம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி குளத்தில் ஊர் ஒன்று கை நுறு திட்டத்தின் கீழ் பராமரித்து தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை துவக்கி வைக்க முத்தாலங்குறிச்சி குளத்துக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வந்தார். அவரிடம் பெண்கள் குணேஸ்வரி தலைமையில் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் "முத்தாலங்குறிச்சி குளத்தினை இதற்கு முன்பு தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஒரு பனை உயரத்துக்கு பள்ளத்தோண்டி அதை அப்படியே போட்டு விட்டார்கள். 

செங்கல் சூளையை சேர்ந்தவர்கள் இதுபோல் முத்தாலங்குறிச்சி குளத்தினை பள்ளம் தோண்டியதால் தற்போது குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்பதில்லை. எனவே தற்போது குளத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி மேடுபள்ளத்தினை ஒன்றுபோலாக்கி குளத்தினை சீரமைக்க வேண்டும். இங்கிருந்து ஒரு வண்டி மண் கூட விற்பனைக்கு சென்று விடக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இந்த திட்டம் குளத்தினை தூர்வாரி செம்மை படுத்துவது மட்டும் தான். எந்த காரணத்தினை கொண்டும் குளத்து மண் வெளியேற்றப்படாது என உறுதி அளித்தார். அப்போது பெண்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் பேசும் போது, இந்த கிராமத்துக்கு மக்கள் குளத்தினை தூர்வாரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குணேஷ்வரி தலைமையில் காத்து கிடந்தனர். இதனால் தற்போது ஊர் ஒன்று கை நூறு திட்டத்தின் கீழ் இந்த குளத்தினை தூர்வாருகிறோம். இதில் பொதுப்பணித்துறை பங்களிப்பும், உள்ளூர் பிரமுகர்கள் பங்களிப்பும் உண்டு. மேலும் இதே போல் மரங்களை பாதுகாப்பது, மழை நீர்சேகரிப்பு தொட்டி நிறுவுவது உள்பட பல திட்டங்கள் இன்று மிகவும் தேவையாக உள்ளது. எனவே அதற்கான நடவடிக்கையை பொதுமக்களும் செய்ய வேண்டும் என கூறினார்.

பின் அவர் முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள அரசு அலுவலகங்களில் தண்ணீர் வீணாகாமல் இருக்க அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்டார். முத்தாலங்குறிச்சி வடக்கூர் சுடுகாடு செல்லும் பாதையை மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் காட்டினர். அதன் ஆக்கிரமிப்பை அகற்ற சப் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் விட்டிலாபுரம்-மணக்கரை சாலையை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிம்ரன் சித்சிங் கலோன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமா சங்கர், தாசில்தார் சந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், கருங்குளம் ஆணையாளர் சுப்புலெட்சுமி, செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுக சேகரி, வருவாய் ஆய்வாளர் அய்யனார் , கிராம நிர்வாக அலுவலர் கந்தசிவசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஒருவன்Jul 14, 2019 - 03:49:52 PM | Posted IP 108.1*****

நன்று

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory