» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்வி தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு : முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

வெள்ளி 12, ஜூலை 2019 4:24:42 PM (IST)

தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் "கல்வி தொலைக்காட்சி” எனும் 24 மணி நேர சேனல் சோதனை ஒளிபரப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி ஆய்வு செய்தார்.

தழிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் தமிழக மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக "கல்வி தொலைக்காட்சி” எனும் 24 மணி நேர சேனல் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதற்கான சோதனை ஒளிபரப்பு TAC TV-யில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 03.07.2019 அன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முதற்கட்டமாக 87 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் TAC TV செட் டாப் பாக்ஸ்களை வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு TAC TV -நிறுவனம் இணைப்பு வழங்கி வருகிறது. இன்று (12.07.2019) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி TAC TV இணைப்பு வழங்கப்பட்ட சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் "கல்வி தொலைக்காட்சி ” சோதனை ஒளிபரப்பை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory